பாதுகாப்பு எச்சரிக்கை : லேப்டாப்பினால் ( laptop ) படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்து ...
எனக்கு வந்த செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் .
கத்தாரில் வேலை செய்யும் ஒருவர் லேப்டாப்பினால் ( laptop ) ஏற்ப்பட்ட தீ விபத்து காரணமாக உயிர் இழந்தார்.
தீ விபத்து ஏற்பட காரணம்
லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு அதை அணைக்காமல் (shutdown ) , அப்படியே படுக்கை அறையில் விட்டுவிட்டு தூங்கி விட்டார் .
பொதுவாக லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , அதன் அடியில் (bottom) உள்ள பேன் (fan ) மூலம் காற்றை ஈர்த்து , குளிர்ச்சி (cool ) செய்து கொள்ள வசதி செய்யப்படுகிறது .
லேப்டாப் ஐ சரி சமம் அற்ற (uneven surface) தளததில் வைக்கும் போது, ( உதாரணமாக படுக்கை ) , பேன் ஆல் குளிர்ந்த காற்றை ஈர்க்க முடியாமல் , அதிக படியான சூட்டுக்கு (overheat ) ஆளானது . அதனால் பெட் , மெத்தை விரிப்பு போன்றவை காற்றை தடுத்து ,அதிக படியான சூட்டுக்கு (overheat ) எரிப்பொருளாக மாறி , தீ பிடிக்க காரணமாக இருந்தது .
தீ பிடிக்க மூன்று முக்கிய தேவைகள் :
எரிப்பொருள் + வெப்பம் + ஆக்சிஜென் ( காற்று)
பாதுகாப்பு முறைகள் :
1. அதனால் லேப்டாப் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ( மொபைல்போன் , chargers ) சரி சமமான தளத்தில் வைக்க வேண்டும்.
2. பயன்படுத்திய பின் அணைத்து (switch off ) விட வேண்டும்.
எனக்கு வந்த தகவலை பார்க்க
இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க