Friday, September 17, 2010

யாரிந்த வினவு ? ஏனிந்த வேலை ?

யாரிந்த வினவு ? ஏனிந்த  வேலை  ?
 
யாருப்பா நீ ? உங்க தொல்லை தாங்க முடியல .. எவ்வளவு நேரம் வீணடித்து எந்திரன் பற்றி பதிவு போட்டீர்கள் .. உங்களுக்கு வேற வேலைய இல்லையா ? அடுத்தவனை திருத்துறது தான் வேலையா?
தனி மனிதனை தாக்குவது புரட்சி இல்லை.
 
நீங்கள் மக்களை நல்வழி படுத்த முயன்றால் .. நல்ல பதிவு போடுங்கள்.... 
எந்திரனை புறககணியுங்கள் ..அரவணை ...  புண்ணாக்கு. அப்படின்னு போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ... 
 
நாங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிகள்  .. எங்களுக்கு தெரியும் யார அரவணைகனும்.. புறக்கணிக்கனும் என்று ....
 
ஊருக்கு உபதசம் வேண்டாம்  ..  
 
ரொம்ப வேலை இருக்கு .. அப்புறம் மீட் பண்ணுவோம் ..

Sunday, September 12, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

எனக்கு வந்த செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் .
 
வ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! 
Elevator.jpg

அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3000ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?
 
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!   


Wednesday, September 8, 2010

சூப்பர் ஹிட் தமிழ்ப்படம் எடுப்பது எப்படி - Sucess formula ???

கதையை முதலில் சுடவும் + தமிழ் கலாசாரத்தை ( அதாங்க opening song , build up , comedy track etc ) இணைக்க + இளமையான ஒரு நாயகி + 6 பாட்டு + 5 fight + உங்க தெறமை ( எதாவது இருந்தா ) = சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்


உதாரணம் கீழேMonday, September 6, 2010

பாதுகாப்பு எச்சரிக்கை : லேப்டாப்பினால் ( laptop ) படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்து ...

 பாதுகாப்பு எச்சரிக்கை :   லேப்டாப்பினால்   ( laptop )  படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்து ...

எனக்கு வந்த செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் .

கத்தாரில்  வேலை செய்யும்  ஒருவர்  லேப்டாப்பினால்  ( laptop )  ஏற்ப்பட்ட தீ விபத்து காரணமாக உயிர் இழந்தார்.

தீ விபத்து ஏற்பட காரணம்
 லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு அதை அணைக்காமல் (shutdown )  , அப்படியே படுக்கை அறையில் விட்டுவிட்டு தூங்கி விட்டார் .  
பொதுவாக லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்  ,  அதன் அடியில் (bottom) உள்ள பேன் (fan )  மூலம்  காற்றை ஈர்த்து  ,  குளிர்ச்சி (cool ) செய்து கொள்ள வசதி செய்யப்படுகிறது . 

லேப்டாப் ஐ சரி சமம் அற்ற (uneven surface) தளததில் வைக்கும் போது, ( உதாரணமாக  படுக்கை  ) , பேன் ஆல் குளிர்ந்த காற்றை ஈர்க்க முடியாமல் , அதிக படியான சூட்டுக்கு (overheat )  ஆளானது  . அதனால் பெட் , மெத்தை விரிப்பு  போன்றவை காற்றை தடுத்து ,அதிக படியான        சூட்டுக்கு (overheat )   எரிப்பொருளாக   மாறி , தீ பிடிக்க காரணமாக இருந்தது  .

தீ பிடிக்க மூன்று முக்கிய தேவைகள் :
எரிப்பொருள் + வெப்பம்  +  ஆக்சிஜென் ( காற்று) 
 
பாதுகாப்பு முறைகள் :
1. அதனால்  லேப்டாப் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை (  மொபைல்போன் , chargers  ) சரி சமமான தளத்தில் வைக்க வேண்டும்.

2.  பயன்படுத்திய பின் அணைத்து (switch off ) விட வேண்டும். 

எனக்கு  வந்த தகவலை பார்க்க 


இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க  


Saturday, September 4, 2010

குழந்தையின் புலம்பல் - பாகம் II

குழந்தையின் புலம்பல் - பாகம் II என் முந்தைய புலம்பலை படிக்க இங்கே சொடுக்கவும்

என் உடலோடு
என் உறவுகளும் வளர்கின்றன ,

சகோதரன் - என் இனிய உணர்வுகளுக்கு

உயிரூட்ட வந்தான் ...

சகோதரி - என் செல்ல குறும்புகளுக்கு

இடம் தந்தாள் ...

இயல்பான இல்லத்தில்

இயற்கையான குதூகலம்
எங்களிடத்தில் !

எட்டி விட்டது காது,

பயணிக்க போகிறேன்
பள்ளி எனும் புது உலகில்
!

Wednesday, August 25, 2010

கேளுங்கள் தரப்படும் .... API Codes , MSDS மற்றும் ASME Codes ....

கேளுங்கள் தரப்படும் .... API Codes , MSDS மற்றும் ASME Codes ....

நான் சேகரித்த API  codes மற்றும் மற்ற  புத்தகங்கள்    ( Chemical , Mechanical , Instrumentation   & electrical ) உங்களுக்காக...


நீங்கள் உங்களுக்கு தேவையான API Code எண் குறிப்பிட்டு ,  உங்கள் மின்னஞ்சல்  (e -mail )   முகவரியை பின்னூட்டம் ( comments ) பகுதியில்  தருக ...


நீங்கள் கேட்டது என்னிடம் இருந்தால் , 

உங்களுக்கு மின்னஞ்சல் ( e -mail ) செய்யப்படும் ...


ஓட்டு போடுங்க , எல்லாரும் பயன் பெறட்டும்   !

பொறியியல் மாணவர்களுக்கு மென்பொருட்கள் - (பொறியியல் படிப்பவர்களுக்கு மற்றும் வேலை செய்பவர்களுக்கு)

பொறியியல் மாணவர்களுக்கு மென்பொருட்கள்

நீங்கள் அல்லது உங்க பசங்க , நண்பர்கள் பொறியியல் படித்து கொண்டிருந்தால் , கீழ்க்கண்ட மென்பொருட்கள் ( softwares ) பயனுள்ளதாக இருக்கும்....


பெட்ரோலியம்  (Petroleum)  பொறியியல் படிப்பவர்களுக்கு    மற்றும் வேலை செய்பவர்களுக்கு இந்த மென்பொருள் ...  இந்த மென்பொருள் மூலமாக மிக சேர்ந்த முறையில் , அனைத்து  calculation செய்யலாம்.

தரவிறக்கம்  செய்ய,
http://www.petrospection.com.au/


இந்த வலை பூவிற்கு சென்று வலது புறமாக உள்ள 

இந்த icon கிளிக் செய்து தரவிறக்கம் செய்க ....
அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் உபயோகமானது ..

தரவிறக்கம்  செய்ய,


http://www.megaupload.com/?d=EGAAUQ01


http://www.megaupload.com/?d=GQIRY0HZ


இந்த பதிவிற்கு உங்க ஓட்டு  போட்டு , அனைவர்க்கும் சென்றடைய செய்யுங்கள் ...