Wednesday, August 25, 2010

கேளுங்கள் தரப்படும் .... API Codes , MSDS மற்றும் ASME Codes ....

கேளுங்கள் தரப்படும் .... API Codes , MSDS மற்றும் ASME Codes ....

நான் சேகரித்த API  codes மற்றும் மற்ற  புத்தகங்கள்    ( Chemical , Mechanical , Instrumentation   & electrical ) உங்களுக்காக...


நீங்கள் உங்களுக்கு தேவையான API Code எண் குறிப்பிட்டு ,  உங்கள் மின்னஞ்சல்  (e -mail )   முகவரியை பின்னூட்டம் ( comments ) பகுதியில்  தருக ...


நீங்கள் கேட்டது என்னிடம் இருந்தால் , 

உங்களுக்கு மின்னஞ்சல் ( e -mail ) செய்யப்படும் ...


ஓட்டு போடுங்க , எல்லாரும் பயன் பெறட்டும்   !

பொறியியல் மாணவர்களுக்கு மென்பொருட்கள் - (பொறியியல் படிப்பவர்களுக்கு மற்றும் வேலை செய்பவர்களுக்கு)

பொறியியல் மாணவர்களுக்கு மென்பொருட்கள்

நீங்கள் அல்லது உங்க பசங்க , நண்பர்கள் பொறியியல் படித்து கொண்டிருந்தால் , கீழ்க்கண்ட மென்பொருட்கள் ( softwares ) பயனுள்ளதாக இருக்கும்....


பெட்ரோலியம்  (Petroleum)  பொறியியல் படிப்பவர்களுக்கு    மற்றும் வேலை செய்பவர்களுக்கு இந்த மென்பொருள் ...  இந்த மென்பொருள் மூலமாக மிக சேர்ந்த முறையில் , அனைத்து  calculation செய்யலாம்.

தரவிறக்கம்  செய்ய,
http://www.petrospection.com.au/


இந்த வலை பூவிற்கு சென்று வலது புறமாக உள்ள 

இந்த icon கிளிக் செய்து தரவிறக்கம் செய்க ....




அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் உபயோகமானது ..

தரவிறக்கம்  செய்ய,


http://www.megaupload.com/?d=EGAAUQ01


http://www.megaupload.com/?d=GQIRY0HZ


இந்த பதிவிற்கு உங்க ஓட்டு  போட்டு , அனைவர்க்கும் சென்றடைய செய்யுங்கள் ...

Tuesday, August 24, 2010

நான் பிரபல பதிவர் ( டேய் , யார்ரா அங்கே ??) ஆனது எப்படி ? -Secret Tips


நான் பிரபல பதிவர் ( டேய் , யார்ரா அங்கே ??) ஆன கதை ஒரு பக்கம் இருக்கட்டும் ... முதல்ல பதிவர் ( யாரு நீ போடறது பேரு பதிவா) எப்படி ஆனேன்  அப்டின்னு சொல்றேன்  ... ஒரு ஊர்ல ஒரு நாள் , வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து மண்டை காஞ்சி போய் இருந்தேன் . லைட்டா ஒரு கட்டிங் போட்டு (6 பெக் லைட்டா )   , நம்ம தமிழ்மணம் பாத்து  ( கண்ணு தெரிஞ்சதா ) நேரம் ஓட்ட முடிவு பண்ணேன் . நான் விரும்பி படிக்கும் ஜாக்கிசேகர் அண்ணா பதிவுகளை படித்து விட்டு , சும்மா ஒரு ஆர்வ கோளாறல , நம்ம தலைவர் எந்திரன் பத்தி வந்த பதிவை ( பதிவுகளை) படித்து விட்டேன் . சும்மா சர்ர்ர்னு கோவம் வந்தது , ஏன்டா , சும்மா ஒரு blog கெடைச்சா , என்ன வேணும்னா போடலாமா .... ( யார் அவனுக சாரி , அவுருங்க மறுபடியும் மன்னிக்கவும் அவர்கள்  பூச்சிகாரர்கள்  அய்யோ மன்னிக்கவும் புரட்சிகாரர்கள்)

நமக்கு வேற தமிழ்ல டைப்
  பண்ணி பழக்கம் இல்ல.  எனக்கு வேற இந்த பால் அபிஷேகம் பண்ற பழக்கம் வேற இல்ல.... என்ன பண்றது ???, அதனால ,தலைவர் மேல பாரத்தை போட்டு  , அவர்களை கிழித்து ஒரு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி ,  சும்மா ஒரு  2 மணிநேரம் ஆச்சி !!!!  ( நடுவுல பவர் கட்டுங்க) . ஒரு நாலு வரிக்கே இப்டினா, நம்ம அண்ணன் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் எப்படி கலக்கராங்க!!!!!! 

அப்புறம் போதை தெளிஞ்சி , காலைல என்னோட பதிவை பார்த்தான் .. பரவா இல்ல .. சூப்பரா இல்லாட்டியும் சுமாரா இருந்தது ( என்னது ).... சரி , இப்படியே develope பண்ணா, நல்லா இருக்கும் யோசிச்சி , என் உள்ள இருந்த  எல்லாம், வெளியல கொட்டினேன் ( அதாங்க , கவிதைன்ற பேர்ல   , ஒரு கண்ராவி போட்டானே , அத சொல்றான்)    

இப்படி தான் நான் பதிவர் ஆனான்  ( இவனை தடை பண்ண என்ன பண்ணனும் ) !!!

அப்புறம் பிரபல பதிவர் ஆனது எப்படினா ,  - யார்கிட்டயும் சொல்லாதீங்க . (நீ பதிவு போட்டே நாலு நாள் தான் ஆகுது) ... என்னோட ஹிட்ஸ் மொத்தம் 150  ( அதுல ஒரு 50  தடவ இவனே போய் பார்த்தான்) .


மீதி கதையை நட்சத்திர பதிவர் ஆன உடனே  சொல்றேன்...    ( அது ஒன்னும் இல்ல அவரு இன்னொரு பதிவு போட பிளான்  பண்றாரு ! , முதல ஒழுங்கா டைப் பண்ணுடா ....... !!  )


ரூபாய் குறியீடை பயன்படுத்துவது எப்படி ????

எத்தனை நாள் தான் கவிதை , கதை , விமர்சனம் பதிவு போட்டு காலத்தை ஓட்றது!!!  சில பயனுள்ள விஷயங்களை  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...  எவ்வளவு பேர் இம்மாதிரி பதிவுகளை பார்ப்பார்கள் என்று தெரியவில்லை ... உங்கள் ஆதரவு இருந்தால் முயற்சி செய்கிறேன் ... அப்பப்ப கொஞ்சம் பொழுதுபோக்கு பதிவு போடுகிறேன் ....  நான் படித்த சேகரித்த விஷயங்கள்  உங்களோடு  !!!!!!

ரூபாய் குறியீடை பயன்படுத்துவது எப்படி ????


இங்கே இணைக்கபட்டுள்ள font ,  தரவிறக்கம் ( download ) செய்க .
பிறகு Start  ->  Settings  ->  Control panel  ->  Fonts  சென்று பேஸ்ட் (paste ) செய்க.

MS office file (word/excel/power point)open  செய்க . Rupee Foradian குறியீடை font இல் தேர்வு செய்க .
கீயுள்ள key ஐ அழுத்தவும் .  




இப்போது நீங்கள் புதிய ரூபாய் குறியீடை பயன்படுத்தலாம் ......

டிஸ்க்: இதை பற்றி  முன்னமே நீங்கள் அறிந்திருந்தால் , நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்

Monday, August 23, 2010

இனிது இனிது - ஒரு குழந்தையின் புலம்பல் !!!

நான் விரும்பிய நாட்களை
சற்றே திரும்பி பார்க்கிறேன்,
தனியாக உள்ளத்தில் உணர்வாக !

நான் அவதரித்த நாள் - என்
தாய் பூரித்த நாள் .

பிறக்கும் போதே பட்டம் கொடுத்தவன்
தாய் என்று !

உலகத்தை உணராத வயதில்
உண்மையை உணர்ந்தேன் என் தாய் மடியில்

உலகத்தை உணர்ந்த  போது
பொய்மையை உணர்ந்தேன் எங்கெங்கும் ...

பிழையோடு பேசினேன் ரசித்தார்கள்
அமுத மொழியை அன்று !

பிழையின்றி   பேசுகிறேன் தமிழ் மொழியை
நகைக்கிறார்கள் இன்று ! 

மாற்றம் என்னிடதிலா
உண்மையை மாற்றி பேசும் உலகத்திலா !!


                       ------     தொடரும் ( நீங்கள் விரும்பினால்)

கவித... கவித.... கவித ...

புதுசா பதிவு போடுவதால் , ரொம்ப நேரம் முயற்சி செய்து கிறுக்கியவை....  

உன் விழிநீர் கூட இனிக்குமடி - அது
விழுகின்ற இடம் உன் கன்னமாய் இருந்தால் !

என் உதிரம் கூட உரையுமடி,

உன் பார்வை பட்டவுடன்,  

என் உயிர் மட்டும் பிரியுதடி ,

உன்னை காணும் முன்பே !!!! 


என்னை மறந்தேன்
உன்னை கண்டதால், 
என்னை அறிந்தேன்
உன்னை மறந்ததால்   


இரு நதி சங்கமம்,
கிளை நதி ஆரம்பம்!
ஆ - குழந்தை    


இரு மனம் இணையும் மதம் மறைந்தால் ,
இரு மதம் இணைந்தது மனம் கசிந்ததால்!
 

Saturday, August 21, 2010

ரஜினி யார்??

மழைப் பேச்சு கேட்கும் மதிய நேரம்... ரஜினியின் பெங்களூர் இல்லத்தில் உரையாடல் தொடர்கிறது...

ரஜினியின் அழகே அவரது ரசனைதான்! சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட ஆச்சர்யம் காட்டுகிறார். ஏராளமான புத்தகங்கள் வாசிக்கிறார். நிறைய இசை கேட்கிறார். ரகளையான வாழ்க்கை கொட்டிக் கொடுத்த அனுபவங்களால் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே புரிகிறது. சினிமா காட்டும் ஸ்டைல் ஹீரோவுக்கும், எதிரில் அமர்ந்திருக்கிற நிஜ ரஜினிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்!

கோபதாபமான, கொந்தளிப்பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் தமிழ்நாட்டுக்குத் தெரியும். ஆனால், போகப் போக ரொம்பப் பக்குவப்பட்ட மனிதராத் தெரியறீங்க...

அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகரும்னு சொல்வாங்கள்ல... அப்படித்தான் வந்துச்சு... ஹாஹ் ஹாஹ் ஹா! உரக்கச் சிரிக்கிற ரஜினி, தன் கை மடிப்பைச் சரி செய்தபடி சொல்கிறார்...

காலம்ங்கிற ஒரு சிற்பி இருக்கான்ல... அவன் சும்மா டிங்கு டிங்குனு நம்மளச் செதுக்கிருவான். அம்பத்தஞ்சு வருஷ வாழ்க்கை கத்துக் குடுத்த அனுபவத்தில் எல்லாம் பாத்தாச்சு. நல்லது... கெட்டது... எல்லாம் பாத்தாச்சு! சரசர சரசரனு தூக்கிட்டு வந்து இங்க உக்கார வெச்ச வாழ்க்கை... இந்த சினிமா, பேர், பணம், புகழ் எல்லாத்தையும் தூக்கித் தூர வெச்சிட்டு, ஒரு நிமிஷம் தனியா உக்காந்து பாத்தா, சம்பாதிச்ச ஒரே விஷயம்- & இந்தத் தமிழ் மக்களின் அன்பும், நல்ல நல்ல மனிதர்களின் நட்பும்தான். அதுதான் கிரேட் கிஃப்ட்... சொத்து!

அதனால மனசு செட்டாகிருச்சு... எல்லாத்துக்கும் பழகிருச்சு!தெரிஞ்சோ, தெரியாமலோ யாராச்சும் துன்பம் குடுத்தாலும் சரி... அவங்களுக்கும் சேர்த்து சந்தோஷம் தர ஆரம்பிச்சேன். க்ஷிடூ யுவர் டியூட்டி. கிவ் தி பெஸ்ட்!க்ஷீ அந்த வகையில் ஐ எம் ஹேப்பி!

நட்புக்கு, நண்பர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற மனிதர் ரஜினி. ஒரு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி... கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஃப்ரெண்ட்ஷிப் இஸ் லைஃப்! அதுக்குத் தனியா ஒரு கிராமர் கிடையாது. ஒரு நல்ல நண்பன் அமையறதே வரம். ஏன்னா, யார்கிட்டேயும் பழகிப் பழகித்தான் புரிஞ்சுக்க முடியும். கஷ்டத்தில்தான் நமக்கு நண்பன் யார், பகைவன் யார்னு தெரியும். நம்மோட பழகறவன் எதுக்காகப் பழகறான்... அவன்ஆப்பர் சூனிஸ்ட்டா, செல்ஃபிஷ்ஷா..? அவன் நிஜமாவே நண்பனா, இல்லே பகைவனா அப்படிங்கிறதெல்லாம் காலப்போக்கில் தான் தெரியும்.

நண்பர்கள் ஏன் முக்கியம்னா, நாம நண்பர்களோடதான் வளர்றோம். சொல்லப்போனா, நல்ல நண்பர்களால் தான் வளர்றோம்! கெட்ட பழக்கங் களோ, இல்லே நல்ல பழக்கங்களோ... எது வர்றதும் நட்பினால்தான்! அதனால ஒருத்தன் நல்லவனா இருக்கிறதுக்கும் கெட்டவனா மாறுறதுக்குமே நட்புதான் காரணம். அதனால்தான் யார்கிட்ட பழகும்போதும், அவங்களை நண்பனா ஏத்துக்கிறதுக்கு முன்னால யோசிக்கணும். ஏத்துக்கிட்டா, அந்த நட்பைக் கடைசி வரைக்கும் காப்பாத்தணும்! நான் அப்படித்தான்... ஏ டூ இஸட் நண்பர்கள்தான் எனக்கு! செல்போன் சிணுங்க, எடுத்துப் பார்க்கிற ரஜினி, பதில் சொல்லி முடித்த இடத்தை மனசுக்குள் ஓட்டிப் பார்த்து, நண்பன்! எனச் சிரிக்கிறார்.

தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் நீங்க... அதனாலயே உங்களுக்கு பிரைவஸி கிடையாது. நினைச்ச மாதிரி வெளியே நடமாட முடியாது. இது உங்களுக்குக் கஷ்டமா இருக்குமா?

கஷ்டம்தான். அதுவும் என்னை மாதிரி ஒருத்தனுக்கு ரொம்பக் கஷ்டம். க்ஷிஇந்த உலகத்தில் எதுவும் ஃப்ரீ கிடையாது கண்ணா. ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்கு!க்ஷீ அதைக் குடுத்தே ஆகணும். எனக்கு பயம், பாதுகாப்பு பற்றியெல் லாம் கவலை இல்லை. இது அன்புக்குக் கொடுக்கிற விலை! அதனால இதுவும் பழகிருச்சு.

வெளியில் என்ன நடக்குது, எது ஃபேஷன், மக்கள் ரசனை என்ன, அரசியல் நிலவரம் என்ன... இதெல் லாம் எப்படித் தெரிஞ்சுக்குவீங்க?

அதுக்குத்தான் மீடியா இருக்கு... ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. அப்புறம், பிரைவஸி இல்லைனு சொல்லி, நான் ஒரே இடத்துல முடங்கிடற ஆள் கிடையாது. நிறையவே டிராவல் பண்றேனே!

சினிமாவில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் ஆன்மிகம்னு இன்னொரு பரிமாணம் இருக்கு. இருவரும் உங்களுக்குள் அதுபற்றிப் பகிர்ந்துக்குவீங்களா?

ராஜா சாரை நான் கூப்பிடறதே சாமின்னுதான். இதோ, இப்போ பெங்களூர் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி ராஜாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். திருவாசகத்தைப் போற்றிப் பாடி ஒரு மியூஸிக் ஆல்பம் பண்ணி முடிச்சிருக்காரில்லையா... அந்த மியூஸிக் கேட்டேன்! அப்பிடியே மனசு மிதக்குது. அது சும்மா ஒரு வேலைனு நினைச்சுப் பண்ணியிருந்தா வந்திருக்காது. அதுல பிரமாதமான ஜீவன் இருக்கு... ஒரு தபஸ் மாதிரிதான் அதை செஞ்சிருக்காரு ராஜா!

அதுக்கான விழாவுக்கு நான் வரணும்னு கூப்பிட்டு இருந்தாங்க. ஆனா, விழா நேரத்துல நான் ஊரில் இருக்க மாட்டேன். அதான்,அவர் வீட்டுக்கு சந்திக்கப் போயிருந்தேன். எனக்கும் ராஜாவுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. அவர்தான் ரமண ரிஷியின் போட்டோ, புத்தகமெல்லாம் எனக்கு முதல்ல தந்தவர். அதுக்குப் பின்னாடிதான் நான் திருவண்ணாமலை போக ஆரம்பிச்சதெல்லாம்! சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள ஆழமான நட்பு எப்பவுமே இருக்கு!

இமயமலைப் பயணங்கள்தான் உங்க வாழ்க்கையை மாற்றி அமைச்ச முக்கியமான விஷயமா?

யெஸ்! என் வாழ்க்கையில் கடந்த 12 வருஷங்கள்தான் மிக முக்கியமான காலகட்டம். சொல்லப்போனா, இந்த 12 வருஷங்களாத்தான் நான் ஹிமாலயாஸ் போக ஆரம்பிச்சதும்!

அங்கே என்ன ஸ்பெஷல்னா, இயற்கை... பிரமாண்டமா விஸ்வரூபம் எடுத்து நிக்கிறப்போ அது முன்னால நாம குழந்தை ஆகிடுவோம். பொதுவா குழந்தைங்க மனசுல எதுவுமே இருக்காதுனு சொல்வாங்க. க்ஷிபாஸ்ட், ஃபியூச்சர்க்ஷீனு எந்தக் கவலையும் குழப்பமும் இருக்காது. அது எப்பவுமே க்ளீன் சிலேட்! வெட்கம், அகங்காரம், போட்டி, பொறாமைனு எதுவுமே அவங்க மனசுல இருக்காது. அப்படியரு லேசான மனசு இமயமலைக்குப் போகும்போது நமக்கும் வாய்க்கும்!

எப்பவும் துறுதுறுனு இருக்குற நீங்க, அங்கே எப்படி பல மணி நேரம் ஒரே இடத்தில் அமைதியா இருக்கீங்க?

அங்கே இருக்கறது நேச்சுரல் வைப்ரேஷன், இங்க இருக்கறது ஹியூமன் வைப்ரேஷன். ரெண்டுக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பாபாஜி குகைக்குப் போறப்போ அந்த அமைதி தானா வந்துடும். யாரா இருந்தாலும் அப்படியரு அமைதிக்கு ஆளாகிடுவாங்க. அங்கே இருக்கிற செடி, மண்ணு, கல்லுனு ஒவ்வொண் ணும் ஒவ்வொரு செய்தி சொல்லும். சும்மா கரையோரமா உட்கார்ந்து கங்கா நதியைப் பார்த்துட்டிருந்தாலே போதும், நீங்க ஆசிர்வதிக்கப்படுவீங்க!

யோகாசனம், தியானம் பழகின பிறகு உங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன... அதுபத்திக் கொஞ்சம் சொல்லுங்க?

நிறைய! அது வந்து... நேரடியா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும். அப்போதான் அந்த சக்தி... பவர் புரியும். சும்மா யோகா, தியானம்னு பேச ஆரம்பிச்சா, அட போப்பான்னுட்டுப் போயிடுவாங்க. யோகா உடம்புக்கு... தியானம் மனசுக்கு! எல்லோருக்கும் டென்ஷன், பிரச்னை, அவஸ்தை, தலைவலி இருக்கு. காலைல வெளியே கிளம்பறப்போ, இன்னிக்குப் புதுசா பிறந்தோம்டானு நினைச்சுக்கிட்டு கிளம்புங்க. ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் அப்பிடியே உட்காருங்க... சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணு மூடி உட்காருங்க. இன்னிக்குக் காலையிலிருந்து சாயந்திரம் வீடு திரும்பற வரை என்னவெல்லாம் நடந்துதுனு நெனச்சுப் பாருங்க.

ஜஸ்ட் திங் அபௌட் இட்! நீங்க யாரையோ காயப்படுத்தி இருக்கலாம். உங்களை யாரோ சந்தோஷப்படுத்தி இருக்கலாம். ஒரு வேலை நல்லபடியா முடிஞ்சிருக்கும். செய்ய நினைச்ச எதையோ மறந்துபோயிருப்பீங்க. அது எல்லாத்தையும் மனசுக்குள் ஒரு ரீப்ளே பண்ணிப் பாருங்க.
முதல் நாள் இது நாலஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுபோயிடும். அப்புறம், அதுவே இன்னும் டைம் கூடும். எங்கியோ ஒரு மொமண்ட்ல தடக்குனு நீங்க உங்களை மறந்து ஒரு சூன்யத்துக்குள் போய் வருவீங்க. அந்த அனுபவம் தனி எனர்ஜி தரும். கிரியா யோகாவை முறையா கத்துத் தர நல்ல மாஸ்டர்ஸ் இருக்காங்க. யோகுடா சத்சங்கில் போய்ப் பாருங்க. கத்துக்கிட்டா இன்னும் நல்லா இருப்பீங்க... இது என் எக்ஸ்பீரியன்ஸ்!

வாழ்க்கை உங்களுக்குக் கத்துக் கொடுத்த விஷயம் என்ன?

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

சினிமாவைத் தவிர, கொஞ்ச காலம் வெளியேயும் நடமாட ஆரம்பிச்சதில் நீங்க புரிஞ்சுக்கிட்ட விஷயம் என்ன?

அட, எல்லோருமே மனுஷங்கதானே! நம்மைச் சுத்தி ஏமாத்துறவன் நிறைய இருக்கான். அவங்ககிட்டே இருந்து நம்மளைக் காப்பாத்திக்கிட்டாலே போதும். வாழ்க்கையில ஜெயிச்சிட லாம்!கடகடவென ரசனையுடன் சிரிக்கிறார் ரஜினி.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?

நான் அமிதாப்ஜிக்கு ஃபேன்! ரசிகன்னா... சும்மா இவ்ளோ, அவ்ளோனு இல்லை. அப்படி ஒரு ரசிகன் நான்... இப்பவும்!

எப்பவோ அவரிடம் இதுமாதிரி ஒரு கேள்வி கேட்டப்போ, அமிதாப்ஜி சொன்ன ஒரே பதில்... ஃபாலோ தி சன்! சூரியனுக்கு முன்னாடி நீ எழுந்திருச்சுடு’னு எங்க அப்பா சொன்னார். வாழ்க்கைல நான் இந்த இடத்தைத் தொட்டதுக்கான ஒரே காரணம் அதுதான். அதைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, எனக்கு எல்லாமே நல்லவிதமா நடக்க ஆரம்பிச்சுது! சொன்னாங்க. அது நூத்துக்கு நூறு கரெக்ட்!

இப்பிடி நிறைய சொல்றதுக்கு இருக்கு. முக்கியமான ஒரு விஷயம் சொல்லிடறேன்... ஒண்ணே ஒண்ணு... அதுவும் நான் ஏற்கெனவே சொன்னது தான்... குடும்பத்தைக் கவனிங்க. தாய், தகப்பனை, சகோதரன், சகோதரியை, குழந்தைகளைப் பாருங்க... உங்க குடும்பத்தைக் காப்பாத்துங்க.
அதை ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சுட் டாலே... எந்த மனுஷனுக்கும் தானா ஒரு பவர் வந்துடும். அந்தச் சக்தியை வெச்சு இன்னும் நாலு பேருக்கு நல்லது செய்யலாம். அப்படி வர்றப்போ, நானும் ஒரு சக்தியா இருப்பேன்!

நன்றியுடன்
2005 ஆண்டு ஆனந்த விகடனில் வெளி வந்த தொடரிலிருந்து

Friday, August 20, 2010

ஒரு ரூபாய் பிச்சை போட முடியாதவன் , ஊருக்கு உபதேசம் - எந்திரன்

எந்திரன் பற்றி எழுதும் நீங்கள் எல்லாம்  எது போன்ற  எழுத்தாளர ( முடியல) என்பது எல்லாருக்கும் தெரியும்.... நீங்கள் செய்த சேவைகள் என்ன ??? புரட்சி என்ன?     இவ்வளு நாளா என்ன ????????? ( கேட்ட வார்த்தை)...... நான் கேட்ட கேள்விக்கு  பதில் சொல்ல தெரியல ... வாய் மட்டும் வண்டலூர் வர ..... ஒரு ரூபாய் பிச்சை போட முடியாதவன் , ஊருக்கு உபதேசம் .... உங்கள மாதிரி நெறைய பேரு பதிவு போடுறாங்க எந்திரன் பத்தி ..... ரஜினி  பத்தி... அதுவும் எப்ப  போட்ட எது கிடைக்கும் தெரிஞ்சி   ... நீங்க ரஜினி பற்றி ஏன்  இவ்வளு நாளா விமர்சனம் பண்ணல..... உங்க புரட்சி கருத்துக்கு இப்ப தான் நேரம் வந்ததா...

எல்லாம் ஒரு விளம்பரம் ...

இதுவரை பதிவுகளை படித்து வந்த என்னையும் பதிவு போட வைத்த "ரஜினி எதிர்ப்பு syndrome " உள்ள கார்கி , நாஞ்சில் ,சூரியன் மற்றும் மற்ற புரட்சி ( என்னது ? அப்ப்டின?) பதிவர்களுக்கும் நன்றி ( இது எப்படி இருக்கு!!!)

Thursday, August 19, 2010

என்னால் லாபம் அடைந்தவர்க‌‌ள் பல பே‌‌ர்: ரஜினிகா‌ந்‌த்

உண்மைதான்… ‘தலைவர்’ கண்ணசைத்தால், அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால்தான், முடிந்தவரை தனது உணர்வுகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கூட பெரிதாக காட்டிக் கொள்வதில்லை ரஜினி.

லங்காரப் பேச்சில் மக்களை மயக்கி வாய் கிழிய பேசும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பிரச்னைகள் குறித்து பேசத்தான் தெரியுமே தவிர அவற்றுக்கு தீர்வு சொல்லத் தெரியாது.

அதே போல சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து இன்று மைக் பிடித்து பொது கூட்டங்களில் பேசும் நடிகர்களுக்கு அங்கும் சினிமா டயலாக் தான் பேச தெரிகிறதே தவிர உருப்படியாக ஒன்றும் பேசத் தெரியவில்லை. .

பிற அரசியல் தலைவர்களை குறை சொல்வதே இவர்களின் பெரும் தகுதியாக இங்கு கருதப்படுகிறது என்பது கொடுமை. இதை சுட்டி காட்ட வேண்டிய ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளோ காசுக்காகவும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் தடம் புரண்டு நாலந்தரத் தூண்களாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.

இவர்களுக்கெல்லாம் “தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக்கும் நான்” என்று மார் தட்டிக் கொள்ளத்தான் நேரமிருக்கிறதே தவிர தமிழனை மேம்படுத்துவது எப்படி என்று சுத்தமாக தெரியாது.

ஆனால் ரஜினி ? எங்கோ பிறந்து, வளர்ந்து, இங்கு நடிக்க வந்து, தமிழை எழுதப் படிக்க கற்று, அனைவரையும் விட நன்றாக தமிழ் பேசும் கலையையும் (பயனுள்ள வகையில்) கற்று தேர்ந்துவிட்டார். அவரின் மேடைப் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை. பிரச்சனைகள் குறித்து அவர் ஆவேசப்ப்டும்போது அவற்றுக்கு தீர்வு சொல்லவும் அவர் மறப்பதில்லை

தலைவர் படத்தை ஒன்றிற்கு மேற்ப்பட்டு பல முறை பார்த்து ரசிப்பவர்களோ, அல்லது அவர் பெயரை தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்பவர்களோ அல்லது அவர் பெயரை கூறிக்கொண்டு பாலபிஷேகம் செய்பவர்களோ, கற்பூரம் காட்டுபவர்களோ, அல்லது அவரை பழிக்கும் வயித்தெரிச்சல் பேர்வழிகளை வசைபாடுபவர்களோ அல்லது இது போன்று தளம் நடத்துபவர்களோ அல்லது எப்போதும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களோ அல்ல. இவையெல்லாம் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை காட்டுவதில் உள்ள வெவ்வேறு வழிகளாக இருந்தாலும் இத்தகு செயல்களால் ரஜினிக்கு எந்த வித மனநிறைவும் ஏற்படப்போவதில்லை என்பதும் அவருக்கு இவை உண்மையான பெருமையும் கிடையாது என்பதே யதார்த்தம்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி சூப்பர் ஸ்டார் மீது அன்பு வைத்து, அந்த அன்பால் தானும், தன் வீடும், இந்த சமுதாயமும் பயன்பெறுமாறு எவன் நடந்துகொள்கிறானோ அவனே உண்மையான ரஜினி ரசிகன். அப்படிப்பட்ட ஒருவனுக்கு தான் “நான் ரஜினி ரசிகன்” என்று கூறி காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் தகுதி இருக்கிறது

Ranjikant donated around 160 cores for charity (old age homes and

orphanages) other than the trust he runs whose maintenance is around 17

crores per annum


hello Mr.Suriyan and nanjil , pls donate atleast one rupee daily


To all blogger,


Good news for all....
நாஞ்சில் பிரதாப் from United Arab Emirates ,and Suriyan will donate some amount from their salary to the poor blogger each month...

Grab this opportunity