Thursday, August 19, 2010

என்னால் லாபம் அடைந்தவர்க‌‌ள் பல பே‌‌ர்: ரஜினிகா‌ந்‌த்

உண்மைதான்… ‘தலைவர்’ கண்ணசைத்தால், அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால்தான், முடிந்தவரை தனது உணர்வுகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கூட பெரிதாக காட்டிக் கொள்வதில்லை ரஜினி.

லங்காரப் பேச்சில் மக்களை மயக்கி வாய் கிழிய பேசும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பிரச்னைகள் குறித்து பேசத்தான் தெரியுமே தவிர அவற்றுக்கு தீர்வு சொல்லத் தெரியாது.

அதே போல சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து இன்று மைக் பிடித்து பொது கூட்டங்களில் பேசும் நடிகர்களுக்கு அங்கும் சினிமா டயலாக் தான் பேச தெரிகிறதே தவிர உருப்படியாக ஒன்றும் பேசத் தெரியவில்லை. .

பிற அரசியல் தலைவர்களை குறை சொல்வதே இவர்களின் பெரும் தகுதியாக இங்கு கருதப்படுகிறது என்பது கொடுமை. இதை சுட்டி காட்ட வேண்டிய ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளோ காசுக்காகவும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் தடம் புரண்டு நாலந்தரத் தூண்களாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.

இவர்களுக்கெல்லாம் “தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக்கும் நான்” என்று மார் தட்டிக் கொள்ளத்தான் நேரமிருக்கிறதே தவிர தமிழனை மேம்படுத்துவது எப்படி என்று சுத்தமாக தெரியாது.

ஆனால் ரஜினி ? எங்கோ பிறந்து, வளர்ந்து, இங்கு நடிக்க வந்து, தமிழை எழுதப் படிக்க கற்று, அனைவரையும் விட நன்றாக தமிழ் பேசும் கலையையும் (பயனுள்ள வகையில்) கற்று தேர்ந்துவிட்டார். அவரின் மேடைப் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை. பிரச்சனைகள் குறித்து அவர் ஆவேசப்ப்டும்போது அவற்றுக்கு தீர்வு சொல்லவும் அவர் மறப்பதில்லை

தலைவர் படத்தை ஒன்றிற்கு மேற்ப்பட்டு பல முறை பார்த்து ரசிப்பவர்களோ, அல்லது அவர் பெயரை தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்பவர்களோ அல்லது அவர் பெயரை கூறிக்கொண்டு பாலபிஷேகம் செய்பவர்களோ, கற்பூரம் காட்டுபவர்களோ, அல்லது அவரை பழிக்கும் வயித்தெரிச்சல் பேர்வழிகளை வசைபாடுபவர்களோ அல்லது இது போன்று தளம் நடத்துபவர்களோ அல்லது எப்போதும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களோ அல்ல. இவையெல்லாம் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை காட்டுவதில் உள்ள வெவ்வேறு வழிகளாக இருந்தாலும் இத்தகு செயல்களால் ரஜினிக்கு எந்த வித மனநிறைவும் ஏற்படப்போவதில்லை என்பதும் அவருக்கு இவை உண்மையான பெருமையும் கிடையாது என்பதே யதார்த்தம்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி சூப்பர் ஸ்டார் மீது அன்பு வைத்து, அந்த அன்பால் தானும், தன் வீடும், இந்த சமுதாயமும் பயன்பெறுமாறு எவன் நடந்துகொள்கிறானோ அவனே உண்மையான ரஜினி ரசிகன். அப்படிப்பட்ட ஒருவனுக்கு தான் “நான் ரஜினி ரசிகன்” என்று கூறி காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் தகுதி இருக்கிறது

Ranjikant donated around 160 cores for charity (old age homes and

orphanages) other than the trust he runs whose maintenance is around 17

crores per annum


hello Mr.Suriyan and nanjil , pls donate atleast one rupee daily


To all blogger,


Good news for all....
நாஞ்சில் பிரதாப் from United Arab Emirates ,and Suriyan will donate some amount from their salary to the poor blogger each month...

Grab this opportunity

No comments:

Post a Comment