Tuesday, August 24, 2010

நான் பிரபல பதிவர் ( டேய் , யார்ரா அங்கே ??) ஆனது எப்படி ? -Secret Tips


நான் பிரபல பதிவர் ( டேய் , யார்ரா அங்கே ??) ஆன கதை ஒரு பக்கம் இருக்கட்டும் ... முதல்ல பதிவர் ( யாரு நீ போடறது பேரு பதிவா) எப்படி ஆனேன்  அப்டின்னு சொல்றேன்  ... ஒரு ஊர்ல ஒரு நாள் , வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து மண்டை காஞ்சி போய் இருந்தேன் . லைட்டா ஒரு கட்டிங் போட்டு (6 பெக் லைட்டா )   , நம்ம தமிழ்மணம் பாத்து  ( கண்ணு தெரிஞ்சதா ) நேரம் ஓட்ட முடிவு பண்ணேன் . நான் விரும்பி படிக்கும் ஜாக்கிசேகர் அண்ணா பதிவுகளை படித்து விட்டு , சும்மா ஒரு ஆர்வ கோளாறல , நம்ம தலைவர் எந்திரன் பத்தி வந்த பதிவை ( பதிவுகளை) படித்து விட்டேன் . சும்மா சர்ர்ர்னு கோவம் வந்தது , ஏன்டா , சும்மா ஒரு blog கெடைச்சா , என்ன வேணும்னா போடலாமா .... ( யார் அவனுக சாரி , அவுருங்க மறுபடியும் மன்னிக்கவும் அவர்கள்  பூச்சிகாரர்கள்  அய்யோ மன்னிக்கவும் புரட்சிகாரர்கள்)

நமக்கு வேற தமிழ்ல டைப்
  பண்ணி பழக்கம் இல்ல.  எனக்கு வேற இந்த பால் அபிஷேகம் பண்ற பழக்கம் வேற இல்ல.... என்ன பண்றது ???, அதனால ,தலைவர் மேல பாரத்தை போட்டு  , அவர்களை கிழித்து ஒரு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி ,  சும்மா ஒரு  2 மணிநேரம் ஆச்சி !!!!  ( நடுவுல பவர் கட்டுங்க) . ஒரு நாலு வரிக்கே இப்டினா, நம்ம அண்ணன் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் எப்படி கலக்கராங்க!!!!!! 

அப்புறம் போதை தெளிஞ்சி , காலைல என்னோட பதிவை பார்த்தான் .. பரவா இல்ல .. சூப்பரா இல்லாட்டியும் சுமாரா இருந்தது ( என்னது ).... சரி , இப்படியே develope பண்ணா, நல்லா இருக்கும் யோசிச்சி , என் உள்ள இருந்த  எல்லாம், வெளியல கொட்டினேன் ( அதாங்க , கவிதைன்ற பேர்ல   , ஒரு கண்ராவி போட்டானே , அத சொல்றான்)    

இப்படி தான் நான் பதிவர் ஆனான்  ( இவனை தடை பண்ண என்ன பண்ணனும் ) !!!

அப்புறம் பிரபல பதிவர் ஆனது எப்படினா ,  - யார்கிட்டயும் சொல்லாதீங்க . (நீ பதிவு போட்டே நாலு நாள் தான் ஆகுது) ... என்னோட ஹிட்ஸ் மொத்தம் 150  ( அதுல ஒரு 50  தடவ இவனே போய் பார்த்தான்) .


மீதி கதையை நட்சத்திர பதிவர் ஆன உடனே  சொல்றேன்...    ( அது ஒன்னும் இல்ல அவரு இன்னொரு பதிவு போட பிளான்  பண்றாரு ! , முதல ஒழுங்கா டைப் பண்ணுடா ....... !!  )


12 comments:

ப.கந்தசாமி said...

என்னங்க, பிரபல பதிவர் அப்படீங்கறீங்க, பதிவு போட்டவுடனே நூறு கமென்ட்டாவது வந்திருக்கவேண்டாமா?

இந்த டெக்னிக்கப் பழகாமெ என்ன பிரபல பதிவர் நீங்க?

ப.கந்தசாமி said...

மொதல்ல குரு தக்ஷிணை கணிசமா எடுத்துட்டு வாங்க, எல்லா டெக்னிக்கையும் விலாவாரியா கத்துக் கொடுக்கிறேன்.

ப.கந்தசாமி said...

அடடே, நீங்களும் நம்ம ஜாதியாய்ப் போய்ட்டீங்க. நானும் கெமிஸ்ட்டுதானுங்க. அதனால குரு தக்ஷிணைல பாதி தள்ளபடிங்க.

ப.கந்தசாமி said...

மொதல் கிளாசை பிரீயாவ சொல்லீட்டனுங்க. என்னை மாதிரி இன்னும் நாலு பிரண்ட்ஸைப் புடீங்க. நீங்க நட்சத்திரப்பதிவராவது உறுதீங்க.

ஸ்ரீஹரி said...

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சார் , உங்கள் ஆலோசனைகளை பின்பற்றுவேன்.

a said...

நல்லா இருக்கு ஸ்ரீஹரி...

ஸ்ரீஹரி said...

மிக்க நன்றி .

Jackiesekar said...

நல்லா இருக்கு...சீக்கரம் பிரபல பதிவர் ஆக வாழ்த்துக்கள் ஹரி..ஆரம்பத்துல இப்படிதான் இருக்கும் அப்புறம் போக போக எல்லாம் சிரியாகிடும்...

Jackiesekar said...

அப்புறம் வேர்டு வெரிபிகேஷனை செட்டிங்கில் இருந்து தூக்கிடு இப்படி இருந்தா யாரும் கமென்ட் போட மாட்டாங்க...

ஸ்ரீஹரி said...

நன்றி திரு . ஜாக்கி சேகர் ... உங்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன் ... உங்கள் பதிவுகள் எங்களை போன்ற புதிய பதிவர்களுக்கு ஒரு முன்னோடி . உங்கள் பதிவுகளை படித்து வியந்ததுண்டு . விரைவில் உங்களை வெள்ளி திரையில் மிக பெரிய ஆளாக பார்க்க ஆசை ......

Iniyal said...

ஹரி உங்கள் பதிவுலக வருகைக்கு வாழ்த்துக்கள், எனினும் இப்போதெல்லாம் காலையில் எழுந்து பல் துலக்குவதை போல் பதிவு போடுவதை பலர் நித்த வேலையாய் கொண்டிருப்பதால் இதில் உங்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று நம்ப படுகிறது. ப்ளாக் போடுவது பெரிய விஷயமே இல்லை, இது கூகுளில் ஒரு முகவரியை ஏற்படுத்தி கொள்வதை போல மிக சாதாரணமானது, இதில் உங்களுக்கு ஹிட்டுகள் அதிகம் இருப்பதால் உங்களுக்கு ஆலோசனை நிறைய கிடைக்கும், அனால் தரமான எழுத்து இணையத்தில் செத்து கொண்டு இருக்கிறது.
இப்படி ப்லகுகளை எழுதும் எத்தனை பேர் சுய தம்பட்டம் இன்றி உலக இலக்கியத்தை படித்தவர்கலாய் இருக்கிறார்கள், புத்தகங்கள் இருந்தவரை தமிழ் எழுத்தாளர்களுக்கு இருந்த மதிப்பு இப்போது இருக்கிறதா ? யாருடைய கருத்தையாவது எதிர்த்து தர்க்கம் செய்யவே நீங்கள் ப்ளாக் தொடங்கி இருக்கலாம், எனினும் எப்போதாவது உங்கள் மனதிற்கு நெருக்கமான விஷயங்களை பதிவு செய்யுங்கள் உங்களுக்கே அதில் மகிழ்ச்சி பெருகும், அதை யாரும் பார்வை இட தேவை இல்லை.

Anonymous said...

good, keep posting...

Post a Comment